இந்த நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த தப்பு செய்தாலும் ஒரு போதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதோடு, அவர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்ட எளிமையானவர் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்! வி.வி.ஐ.பிக்களை காப்பாற்ற, ஒரு வழக்கை எப்படி எல்லாம் நீர்த்து போக வைப்பது என்பதற்கு இதுவே அத்தாட்சி; கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பழக்கப்படுத்த முயன்ற அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு வழக்கில் கல்லூரி மாணவிகளை அனுபவிக்கத் துடித்தவர்கள் யார்? தொடர்ந்து அனுபவித்து வந்தவர்கள் யார்? இதில் சங்கிலி தொடர் போல இருக்கும் – பல ...