நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த தீபாவளி துன்பத் திருநாளாகிவிட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் பல மாதங்களாக தரப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் துக்கத்தில் உள்ளனர். மத்திய பாஜக அரசு நெல் கொள்முதலில் தமிழ் நாடு அரசை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களை வலிந்து நுழைத்ததில் ஏற்படும் விளைவுகள், விவசாயிகளை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது; எல்லாத் தளங்களிலும் வலுவாக உள்ள அரசு கட்டமைப்பை தகர்த்து தனியாரை நுழைப்பதில் தணியாத தாகம் கொண்டிருக்கும் பாஜக அரசு, விவசாயிகள் வாழ்க்கையில் படுபாதகங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை விவசாயிகள் ...



















