நீட் தேர்வில் எக்கச்சக்க சிக்கல்கள்! வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், ஊழல், கருணை மதிப்பெண்கள், தேர்வு முடிவுகளில் குளறுபடி..என அம்பலமாகி வருகின்றது. நீட், க்யூட், நெட் போன்ற தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ என்பது யார் ஆதாயம் பெற இயங்குகிறது..? இந்த சூதின் வலைப் பின்னல்கள் குறித்து ஒரு அலசல்; நீட் ஏற்படுத்திய கொதிப்பு அடங்குவதற்குள்,யு.ஜி.சி – நெட் தேர்வு மோசடி அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18 ந்தேதி நடைபெற்ற யு.ஜி.சி – நெட் தேர்வில் முறைகேடுகள் நடத்திருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததாகக் கூறி, அடுத்த நாளே 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை. டார்க் வெப், டெலிகிராம், வாட்சப் போன்ற செயலிகளில் வினாத்தாள் ரூ5,000 முதல் 10,000 வரை சுமார் 6 லட்சத்திற்கு விற்கப்பட்டது ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளது. மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் , யு.ஜி தேர்வு மே 15 ந்தேதி முதல் 24 தேதி வரை நாடு முழுவதும் 320 ...