உ.சகாயம் ஐ.ஏ.எஸை வழிகாட்டியாகக் கொண்டும், நாகல்சாமி. ஐ.ஏ.எஸ்சை (ஓய்வு) தலைவராகக் கொண்டும் செயல்படும் மக்கள் பாதை பேரியக்கம் செப்டம்பர் 14 தொடங்கி முதல் நீட்டுக்கு எதிராக தொடர் உண்ணாவிரப் போராட்டத்தை சென்னை சின்மயா நகரிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் முன்னெடுத்துள்ளது. சுமார் 40 பேருடன் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு மாவாட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து கலந்து கொண்டனர்! முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த மாணவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சியில் நீட்டுக்கு எதிரான ...