மகத்தான இளைஞர் எழுச்சி எந்த மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மத்திய ஆட்சியாளர்களிடம்! வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தமாம்! ஆர்.எஸ்.எஸின் முரட்டுத் தளகர்த்தர் புதிய கல்வி அமைச்சராம்! நீட் மோசடிகளுக்கு காரணமான மூல வேர்களை பழுதில்லாமல் பாதுகாத்து, புதிய தந்திரோபாயங்களுடன் பாயவுள்ளது பாஜக அரசு; முழுமையான அலசல்; மேன்மேலும் மூர்க்கமாக செயல்படவும், நடைபெற்ற குற்றங்களுக்கு பொறுப்பேற்காமல், யாரோ செய்ததைப் போலவும் அவர்களுக்கு சிறை, மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம், வினாத்தாள் கசிவை தண்டிக்க ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதன் மூலமாகவும் பிரச்சினைக்கு ...
அறிமுகமானது தொடங்கி 11 ஆண்டுகளாக மோசடி புகார்கள் இல்லாமல் நீட் தேர்வு நடந்ததில்லை. ஏன் இத்தனை குளறுபடிகள்? கோச்சிங் சென்டர்களின் ‘பவர் லாபி’ தில்லு முல்லுகளுக்கு தேசிய தேர்வு முகமை ( NTA) உடந்தை! இதன் பின்னணியில் புரளும் ஒரு லட்சம் கோடி கல்வி வணிகத்தின் செல்வாக்கு குறித்த ஒரு அலசல்; இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற்றது. சுமார் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். வழக்கம் போல வினாத்தாள் வெளியானது. அது கைக்கு கிடைத்தவர்கள் முதல் மார்க்குகளை ...

















