அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்! ‘எளிய, கடைக்கோடி மனிதனுக்கு நீதி மறுக்கபடக் கூடாது’ என்பதில் ஆர்வம் காட்டுவார்! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்! அம்பேத்கார் சட்டப் பணிகள் சங்கம் என்றும் பவுத்த பொதுவுடமை இயக்கம் எனவும் இயங்கி வருகிறார்! நேற்றைய தினம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் பொது நலன் சார்ந்து செயல்படும் முக்கியமான வழக்கறிஞர்கள் பலர் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி, புரட்சியாளர் பகத்சிங் ஆகிய இருவரையும் மையப்படுத்தி நினைவுகூறும் விதமாக ஒரு ...