உலகில் வளர்ந்த நாடுகளே கூட இது போன்ற அதிகார குவிப்பை செய்வதில்லை;மாநில உரிமைகளை வலுப்படுத்த ஒரு அதிரடி தேவை இன்றைக்கு உருவாகி உள்ளது. மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவதும், மாநிலங்கள் டம்மிகளாக ஆக்கப்படுவதையும் கேள்விக்கு உள்ளாக்கினால் பாஜக தலைவர்களுக்கு ஏன் இத்தனை கோபம்..? இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியமாகும். வெவ்வேறு மொழி, இனம், கலாச்சாரம் கொண்ட மாநிலங்கள் கூட்டாட்சி தத்துவத்தால் தான் பிணைக்கப்பட்டதாக நம்புகின்றன. ஆனால், அந்த நம்பிக்கை சிதையும் வண்ணம் கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேஷனுக்கு உள்ள அதிகாரங்கள் மட்டுமே இன்றைய தினம் இந்திய ...