தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன வேறுபாடுகளை களைவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைகளை இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன.பாஜக எதிர்க்கிறது. கடும் விமர்சனங்களை பெற்றுள்ள பரிந்துரைகள் சரியானது தானா? பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பல பரிந்துரைகள் தந்துள்ளார். அவற்றுள் சில வரவேற்க தக்கன. இன்னும் சில விவாதிக்க வேண்டியன! நாங்குநேரி சம்பவத்தையும், அது போன்ற சம்பவங்களின் சமூகப் பின்புலத்தையும் ...