மிகக் குறுகிய காலம். அதே நேரத்தில் மிக முக்கியத்துவமான வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கினார், பி.ஆர்.கவாய். இதில் போற்றத்தக்கவை எவை? ஏற்க முடியாதவை எவை? அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை அவர் எவ்விதம் எதிர் கொண்டார்..? என அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்; ஓய்வு பெற்றார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய்! நவம்பர்- 23,.2025 அன்று பணியிலிருந்து விடுபட்ட கவாய் மே-14, 2025 -ல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்கள்  மட்டுமே பணியாற்றினார். இந்த ஆறு மாதங்களில், சுமார் 2 ...

தலைமை நீதிபதி தாக்கப்படப் போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவது போல சனாதன வெறியர்கள் சமூக ஊடகங்களில் வன்மத்தை தொடர்ந்து விதைத்தனர். அதை ஆட்சியாளர்கள்  ரகசியமாக ரசித்தனர். அவர் செருப்பு வீசித் தாக்கப்பட்ட பின்னரும் தாக்கியவரை சம்பிராதாயமாக விசாரித்து உடனே விடுவித்தனர். இதன் பின்னுள்ள அரசியல் என்ன? அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது மயூர் விகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்கினார். ஆனால், அது குறி தவறி அவரது அருகில் ...