நீதிபதிகள் என்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சுதந்திர இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பதவி இழக்க வேண்டிய நிர்பந்தங்களை சந்தித்த நீதிபதிகளை நீதித் துறை கண்டுள்ளது. சில நீதிபதிகள் அவமானங்களை தவிர்க்க தாங்களே ராஜுனாமா செய்ததும் உண்டு. இவை பற்றி அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்; டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட  பணக் குவியல் இந்தியா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அந்த நீதிபதியின் வீட்டில் தீப்பிடித்த  நிகழ்வில்  ஒரு அறையில் மிகப்பெரிய அளவில் பணக் குவியல் இருந்தது அம்பலமாகிவிட்டது. ஒரு அரசியல் ...