வியந்து போகிறேன்…! எத்தனை உயர்ந்த பதவியில் எத்தனை மோசமான பொய்கள்! நீதிபதி பதவி என்பது பொய் சொல்வதற்காக தரப்பட்ட அங்கீகாரமல்ல. உண்மையான வரலாற்றை மறைத்து பொய் வரலாற்றை திணிக்கும் அதிகாரத்தை நீதிபதி பதவிக்கு நமது அரசியல் சட்டம் வழங்கவில்லை. உதயநிதி ஸ்டாலின், ”சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இதற்கு பாஜகவின் அமித்மாளவியா என்பவர், ”இது சனாதனிகளை இனப் படுகொலை செய்யும் பேச்சு” என பதிவிட்டு இருந்தார். அமித்மாளவியாவின் பேச்சுக்கு திமுக வழக்கறிஞர் அணி கே.ஏ.வி.தினகரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் தர, காவல்துறை ...












