இந்திய நீதிமன்றங்களில் தேங்கிய நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5.64 கோடிகளாம்! நீதிபதிகள் பற்றாக்குறையால் தான் வழக்குகள் தேங்குகின்றன என்ற பொதுக் கருத்துள்ளது. உண்மையில் வழக்குகள் நீதி பரிபாலனத்தில் அரசியல் அழுத்தங்களால் நீண்ட காலம் தேங்குகின்றன, நீதிமன்றம் எளியோருக்கு நீதி என்பதன்றி இயந்திர கதியில் செயல்படுவதாலும் வழக்குகள் தேங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன; உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34 லிருந்து 38 ஆக உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அவசரச் சட்டம் மூலம் 38 ...


















