அரசாங்களின் அநீதி, அலட்சியத்தால் போராட்டங்கள் உருவாகின்றன. அதை ஒடுக்க தொடர்ந்து நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. மராத்திய சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் நீதிமன்றம் கெடு விதித்தது. பாதிக்கப்படுவோர் போராடினால் அரசாங்கம் பேசித் தீர்வு காண வேண்டும். மாறாக, தொடர்ந்து நீதிமன்றத்தின் தலையீட்டை கோருவது குறித்த அலசல்; மராத்திய சமூகமே ஒன்று பட்டு எழுந்து நின்றது போன்ற ஒரு தோற்றம் உருவானதென்னவோ, உண்மை. ஆகஸ்ட்-29 தொடங்கி ஐந்து நாட்களாக 42 வயதே நிரம்பிய ஒரு எளிய மனிதன் மனோஜ் ஜராங்கேயின் ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் தெற்கு மும்பையையே ...













