இன்னும் எத்தனை முறை தான் ஒ.பி.எஸுக்காக நீதிபதிகள் தலையை பிய்த்துக் கொள்வார்களோ…!  டெல்லி ஆண்டவனுக்கே வெளிச்சம்! நியாயப்படி பார்த்தால், இது நீதிமன்றம் விசாரிக்க தகுந்த விஷயமல்ல. ஆனால், பாஜக தலைமை விரும்பும் வரை நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்! சட்டரீதியான அலைக்கழிப்பை ஏற்படுத்தி, அதிமுகவை சாய்க்கும் வரை மேல் முறையீடுகள் தொடரலாம்! உண்மையில் கிராமத்து மரத்தடி பஞ்சாயத்திற்கு போயிருந்தால் அரை மணி நேர விசாரணையில் தெளிவாக தீர்ப்பு சொல்ல முடிந்த ஒரு எளிமையான வழக்கு தான் இது! ஒரு கட்சியில் இரண்டு பெரிய ...