வாசகர்களை மட்டுமே பெற்ற எழுத்தாளரில்லை, கவிஞர் கண்ணதாசன்! தீவிர நேசர்களை, எண்ணிலடங்கா தாசர்களை, கவிதைப் பித்தர்களை, ஏன், கசிந்துருகும் பக்தர்களையும் தன் எழுத்தாற்றலுக்கு பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். இப்படிப்பட்ட கண்ணதாசனின் பன்முக ஆளுமைகளை பார்க்கும் போது, ‘இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருப்பாரா?’ என வியப்பே மேலிடுகிறது; கண்ணதாசன் நூற்றாண்டு விழாக்கள் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டுள்ளன..என்பதை விடவும், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலெல்லாம் கூட நடந்து கொண்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளில் கூட கண்ணதாசன் தொடர்பான பேச்சு போட்டிகள், கட்டுரை, கவிதை போட்டிகள் ...



















