‘நெரு’ (Neru). மலையாளச் சொல்லுக்கு ‘உண்மை’ என்று அர்த்தம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வையற்ற இளம் பெண், உண்மையை நிலை நாட்ட நடத்தும் சட்டப் போராட்டமே கதை! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அறம் பிறழாமல், விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரைக் கதை, இயக்கம் அசத்துகிறது! மலையாள இயக்குனர்கள் தமக்குள்ள சமூக பொறுப்பில் சிறிதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தாம் கூற வருவதை அவர்கள் தெள்ள தெளிவாக கூறி பரந்த அளவில் பாராட்டையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியடைகிறார்கள்! திரைக்கதை ...