வெயில், மழை பாராமல்  நாளும், பொழுதும் பாடுபட்டு பயிர் விளைவித்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கே இந்தப் பாடுபடுத்த வேண்டுமா? லஞ்சமின்றி  நேர்மையான கொள்முதல்  சாத்தியமே இல்லையா? தற்கொலைக்கு  தள்ளும் அளவுக்கு மன உளைச்சல் தருவதா? நம்மை பசியாற வைக்கும் விவசாயிகளை விவசாயத்தைவிட்டே வெளியேறச் செய்யும் அளவுக்கு நெல்கொள் முதல் நிலையங்கள் பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளை நடத்துவதை  ஆட்சியாளர்களால் ஏன் தடுக்க முடியவில்லை…? மிகச் சமீபத்தில் கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் குமார் ...