திகுதிகுக்கிறது நேபாளம்!  மட்டுமீறிய ஊழல், சொத்துக் குவிப்பு, ஆட்சியாளர் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை, பெருகி வந்த வேலையின்மை… இத்துடன்  இவையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலமானதையடுத்து அதற்கு போடப்பட்ட தடை… ஆகியவற்றால் கொந்தளித்த இளைஞர்களின் அறச்சீற்றத்தால் ஆட்சியாளர்கள் ஓட்டம்; இமயமலையின் அடிவாரத்தில் உள்ள அழகிய நாடான நேபாளத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட அறச் சீற்றம் காரணமாக ஆட்சி கவிழ்ந்துள்ளது. ”எங்களை ஆட்ட முடியாது, அசைக்க முடியாது, சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம், போராட்டங்களை ஒடுக்கி விடுவோம்…” என காவல்துறையையும், இராணுவத்தையும் களத்தில் இறக்கினர் ஆட்சியாளர்கள். போ​ராட்​டக்​காரர்​களுக்​கும், ...