நேபாளத்தில் ஊழல்மிக்க ஆட்சியை இளைஞர்கள் அறச் சீற்றத்துடன் தூக்கி எறிந்த நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு தற்காலிகமாக ஒரு அரசு நிறுவப்பட்டது. தற்போது தேர்தலுக்கு தயாராகிறது நேபாளம். நேபாளத்தில் பத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரே சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க தயாராகி வருவது குறித்த ஒரு அலசல்; நேபாளத்தில் மன்னராட்சி அகற்றப்பட்டு அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டுள்ளது. ‘இந்தக் குடியரசைப் பாதுகாப்பது, தேர்தலை ஒன்றாகச் சந்திப்பது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இணைந்து செயல்படுவது’ என கம்யூனிஸ்ட் கட்சிகள்  முடிவடுத்துள்ளன. ...