இவ்வளவு வெளிப்படையாகவும், இணக்கமாகவும் மாநில முதல்வர்களுடன் ஒரு பிரதமர் தொடர்ந்து உறவாடி இருக்க முடியுமா? என்ற ஆச்சரியத்தை தருகின்றன, நேருவின் கடிதங்கள்! பாகிஸ்தான் உடனான உறவை பகையின்றி பேணுவதில் தான் இரு நாடுகளுக்குமே எதிர்காலம்.. போன்ற கருத்துக்கள்! இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்கலால் நேரு, மாநில முதலமைச்சர்களுக்கு, 1947 முதல் 1963 வரை 15 நாட்களுக்கு ஒரு முறை கடிதங்கள் எழுதியுள்ளார். ஆய்வாளரான மாதவ் கோஸ்லா (Madhav Khosla), இந்தக் கடிதங்களை, ‘Letters for a Nation’ என்ற பெயரில் நூலாக தொகுத்துள்ளார். இதனை ...