ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஏன் நேரு எட்டிக் காயாக கசக்கிறார்? ஏன் நேருவிற்கு எதிரான அவதூறுகளை அவர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். காந்தியைக் கொன்றவர்கள், காந்தியின் சீடரை எப்படி அணுகினர்? ஆர்.எஸ்.எஸை நேரு எப்படி மதிப்பீடு செய்திருந்தார்? நேருவின் இறப்பிற்கு என்ன காரணம்? இந்தியா விடுதலை அடைந்த நாளுக்கு மறுநாள், முதல் பிரதம அமைச்சராக நேரு பதவி ஏற்றுக்கொண்டார். மதவாதத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரான தனது தீர்க்கமான முடிவை அவர் நாட்டுக்குத் தெரிவித்தார். “குறும்பு செய்பவர்களும் தொல்லை தருபவர்களும் நமது எதிரிகள். அவர்களை ஒரு தீவிரத்தோடுதான் கையாளவேண்டியிருக்கிறது”. தேசத்தந்தை காந்தியின் படுகொலை, இந்து அடிப்படைவாதிகளின்மேல் அவரது ஐயங்களை ஆழப்படுத்தியிருந்தது. இந்து ராஷ்ட்டிரத்தை நிறுவும் அவர்களது வெளிப்படையான இலக்கைத்தாண்டி, இந்து மஹாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் ...