இந்தியாவின் மிகப் பெரிய தொழில் மையமான நொய்டா, தொழிலாளர் போராட்டங்களால் பற்றி எரிகிறது. அடிமாட்டுச் சம்பளம், அரை வயிற்றுக் கஞ்சி, கண்ணியமில்லாத வாழ்க்கை… என நிர்பந்திக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடியதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது பாஜக அரசு; இந்தியாவில் ஐ.டி செக்டார் தலையெடுத்து இருபது வருடங்களாகிறது. ஒரு பக்கம் நல்ல சம்பளம் பெற்று வந்த இளைஞர்கள் அடிக்கடி வேலை இழக்கிறார்கள்…, பாதுகாப்பற்ற வாழ்க்கையில் உழல்கிறார்கள் என்றால், மறுபக்கம் பிரம்மாண்ட தொழிற்சாலைகளில் பணி புரியும் எளிய தொழிலாளர்கள் படும் ...
















