தனித்துமான பேச்சாற்றல், தகதகக்கும் எழுத்தாற்றல் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற சிறந்த தமிழ் ஆளுமை பழ.கருப்பையாவிடம் இந்தச் சார்பு நிலையையும், உண்மை மறைப்பையும் நாம் எதிர்பார்க்கவில்லை! அரசியல் தோல்விகள் தந்த விரக்தியா..? என்ன கட்டாயம் வந்தது அவருக்கு..? பழ.கருப்பையாவின் பேச்சிலும், எழுத்திலும் எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு! ‘பதவியை உதறுவது எளிதில்லை’ என்ற அவரது இன்றைய தினமணி நடுப்பக்க கட்டுரையை அதி ஆர்வத்துடன் வாசித்தேன். ‘கடந்த ஆயிரம் ஆண்டுகால இந்தியவில் பொற்காலம் என்று சொல்லத்தக்கது, காந்தியின் தலைமையில் நாடு நடந்த காலம் தான்.. ‘ ...