ஒரு யூ டியூப் ஊடகத்தை நடத்தும் ஒர் சுயாதீனப் பெண் பத்திரிகையாளரின் சமூக அக்கறையும், மனித நேயமும் தான் படத்தின் கரு. சினிமாத் தனங்கள் இல்லாத யதார்த்தமான படம். மற்றவர்கள் படும் இன்னல்கள், இம்சைகளை கண்டும் காணாமல் கடந்து செல்லும் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி செயல்படத் தூண்டும் படம்..! அரசு ஆதரவோடு நடந்துவரும் ஒரு இளம்பெண்கள் இல்லத்தில் நடந்துவரும் பாலியல் அத்துமீறல்களையும், கொடுமைகளையும்  வெளிக் கொணரும் படம் Bhakshak. காணொளி ஊடகம்  நடத்தி வரும் ஒரு பத்திரிகையாளர், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முற்படுவது ...