சமீபத்திய மழையில் சென்னை ஸ்தம்பித்து, திணறியது! கால நிலை மாற்றங்கள்  நம்மை கலவரப்படுத்துகின்றன! இந்த மார்கழி மழையை பலர் மர்மாகவும், புதிராகவும் உணர்ந்தனர். நமது மரபில் மழை முன்கணிப்பிற்கு முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த கரு ஓட்ட கணக்குப்படி, மார்கழி கர்ப்போட்ட காலங்களில் கன மழை பொழிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தெளிவான விடை உள்ளது! இந்த ஆண்டு பருவமழை காலங்களில் அதிகமான மழை பொழிவின் நீர்ப் பெருக்கால் சென்னை மிகவும் அல்லலுற்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் பல்வேறு வகையினரால் சொல்லப்பட்டன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, ...