பத்தாண்டுகள் மக்கள் விரோத, படுபாதக ஆட்சி நடத்தியும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது! எதிர்கட்சிகள் மீது மக்கள் முழு நம்பிக்கை கொள்ள முடியாமல் இருக்கும் காரணங்கள் என்ன..? தனிப்பட்ட முறையில் ஒரு மக்கள் தலைவருக்கான எதிர்பார்ப்புகளை ராகுல் உணர்ந்துள்ளாரா..? தற்போதுள்ள ஒரே ஆறுதல் தனிப் பெரும் மெஜாரிட்டி பாஜகவிற்கு கிடைக்கவில்லை! கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும், காங்கிரஸ் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது என்றாலும், பாஜக வென்ற தொகுதிகளில் பாதி அளவைக் கூட காங்கிரஸ் எட்ட முடியவில்லை. இந்தியாவிலேயே பாஜகவை ...