இந்தக் கோழைத்தனம் தான் அவர்களின் தொடர் வெற்றியாகிறது! மெய் பொருள் காண்பது அறிவு! கடல் கடந்து சென்ற இடத்தில் தனக்கு உணவு தந்து உபசரித்த பெண்ணிடம் வற்புறுத்தி சாதியைக் கேட்டுவிட்டு, அது வெளியே தெரிந்து, கடும் கண்டணங்கள் எழுந்தவுடன், சம்பந்தப்பட்ட குடும்பப் பெண்ணின் கணவரைத் தொடர்பு கொண்டு, மன்றாடி சமாதானப்படுத்திவிட்டு, தான் அப்படிப் பேசவில்லை எனப் பேசிக் கொள்வதற்கு அனுமதி பெற்று இருக்கிறார், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா! பேசாத ஒன்றைப் பேசியதாக தன் மீது குற்றசாட்டு வைக்கப்பட்ட ஒருவர் என்ன செய்திருப்பார்? எப்படி என் ...