உண்மையின் உக்கரத்தை சகிக்க முடியாத ஆட்சியாளர்கள் தங்களின் பதட்டத்தை இந்த ரெய்டிலும், கைதிலும் வெளிப்படுத்தி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள். உண்மைகளை பேசி, அரசை கதிகலங்க வைத்தவர்கள். இந்த கைதின் பின்னணி என்ன..? அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு தில்லி காவல்துறை நியூஸ் க்ளிக் என்ற ஆங்கில இணைய இதழ் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள்.. என பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அவர்களது கைபேசி மற்றும் ...