பனை தமிழ்நாட்டின் தேசிய மரம். நமது அடையாளம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்வாதாரம்…அனைத்தும் பனையே. அதிகாரத்தில் உள்ளவர்களின் பேராசைக்காக மெல்லக் கொல்லும் விஷமான டாஸ்மாக் மதுவை அருந்தி தமிழனம் மாய்ந்தழிவதா? கள் எனும் உணவு நம் உரிமை அல்லவா..? பனை ஏறுவது குற்றமா? சீமானை கைது செய்வீர்களா…? பனை மரம் மீதேறி சீமான் பனங்கள்ளை எடுத்தது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. பெரிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதி வருகின்றனர் சிலர்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், வி.சி.கவின் ரவிக்குமாரும்,வன்னியரசும் இந்த ...













