ஆப்பிளும் ஆரஞ்சும்  பெறும் மதிப்பை, அதிக சத்து வாய்ந்த பப்பாளி ஏனோ பெறவில்லை. ஆரோக்கிய வாழ்வுக்கு பப்பாளி தரும் பலன்களுக்கு ஈடு இணையே கிடையாது. பப்பாளி பழத்தின் விலையோ குறைவு. பலன்களோ கணக்கில் அடங்காதது. இதைக் குறித்து சில தவறான கருத்துக்கள் உள்ளன. உண்மை அறிவோம்; நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக் கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும்  ஒரு  அற்புத மரம் இது. பப்பாளி இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் ...