தெளிவாக, உறுதிபடப் பேசுகிறார்! உரிய தரவுகளூடன் உக்கிரமாக தாக்குகிறார் பாஜக அரசை! வேலையின்மை, சமத்துவமின்மை தொடங்கி விவசாயப் பிரச்சினை வரை அலசுகிறார் பரகால பிரபாகர்! நிர்மலா சீதாராமனின் கணவரான இவர் காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் கவனிக்கத் தவறியவற்றைக் கூட கவனப்படுத்துகிறார்; சென்னை சிந்தனையாளர் மன்றம் ஏப்ரல் 16, அன்று நடத்திய கருத்தரங்கில், ஆந்திராவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ (The crooked timber of new india) என்ற நூலின் ஆசிரியருமான பரகால பிரபாகர் ‘நெருக்கடிகுள்ளாகும் மதிப்புகள்’ (values at ...