பொருளாதாரம் பின்னடைவா ? 90 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதா? சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்ததா..? என்ற கேள்விகள் இருக்கட்டும், மச்சேந்திரநாதன் குழுவின் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கையை ஏன் பொது வெளியில் வைக்காமல் மறைத்தீர்கள்? பரந்தூர் சர்வதேச விமான நிலைய திட்டம் ரத்தான பின்னணியில் உள்ள உண்மை நிலை என்ன?; தேர்தல் பிரச்சாரத்தில் தரும் வாக்குறுதி எதையும் பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராகவே செயல்பட்டு பழக்கப்பட்ட திமுகவினருக்கு, தவெக அரசு சொன்னப்படியே பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து அறிவித்ததானது ...
















