ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்!  டாஸ்மாக் முறைகேடுகள் , அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு..எல்லாமே ஆடிட்டர் ஸ்கிரிப்ட் தானா? இன்றைக்கு இந்தி திணிப்போடு, சமஸ்கிருத திணிப்பும், சனாதன மேலாதிக்கமும் பாய்ச்சலோடு நடக்கின்ற சூழலில்  புதிய பராசக்தி வந்துள்ளது. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சி என்பது பாஜக எதிர்ப்பைப் பேசிக் கொண்டே பாஜகவின் அஜந்தாக்களை  அச்சுபிசகாமல் நிறைவேற்றித் தரும் ஆட்சியாக உள்ளது என்பதை தொடர்ந்து ஆழமான ...

பராசக்தி சொல்ல வரும் செய்தி என்ன? காங்கிரஸ் மீதான அதி தீவிர வெறுப்பை ஆழமாக விதைப்பதா? இளைய தலைமுறைக்கு பாஜகவை விட காங்கிரஸ் தான் மிகப் பெரிய வில்லன், அழிக்கப்பட வேண்டிய நாசகார சக்தி என்ற உணர்வை தோற்றுவிப்பதா..? இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்த திமுக இன்று செய்து கொண்டிருப்பது என்ன..? மிகுந்த ஆர்வத்தோடு பராசக்தி படம் பார்க்கச் சென்றேன். தமிழ்நாட்டு வரலாற்றில்  தமிழ் காக்க நடத்தப்பட்ட மகத்தான உணர்வெழுச்சியே இந்தி எதிர்ப்பு  போராட்டங்களாகும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆவணப்படுத்தும் வகையில் இது வரை ...