‘விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்த சிட்டுக் குருவியைப் போலே’ என்பான் பாரதி. இந்தப் படம் நமக்குள் கடத்திச் செல்லும் செய்தி இது தான்! வழக்கமான சினிமா மசாலாத்தனங்களில் இருந்து விலகி வாழ்க்கையை அதன் வலிகளுடனும், வசந்தமான சந்தோஷங்களுடனும் இந்தப் படம் பேசுகிறது; நுகர்வு கலாச்சார ஆசையில் நுகத்தடி பூட்டிய மாடு போல பொருளாதாரத் தேடலை நோக்கி பயணப்பட்டே தனக்கான நிம்மதியான வாழ்க்கையை தொலைத்து விடுகிற இன்றைய நடுத்தர வர்க்க தம்பதியர் வாழ்க்கை குறித்த அற்புதமான பதிவு தான் இந்தப் படம். தங்கள் மகனை அதிக ...