எங்களுக்கு ஹெலிகாப்டர் ரெய்டு மூலம் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம். பறவைகள் வருகை, சுற்றுச் சூழல் முக்கியத்துவம் இவையெல்லாம் தேவையில்லை என்பது அதிகாரத்தில் உள்ளவர்கள் நிலைபாடு..! கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவில் கிழக்கு கடற்கரை பகுதியின் பறவைகள், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஒரு பார்வை; விவகாரம் இது தான்: இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையான சென்னையை ஒட்டிய கடற்கரை, பல தடாகங்கள், முகத்துவாரங்கள் மற்றும் உப்பங்கழிகளை கொண்டதாகும். இந்த கடல் பகுதி பல்லுயிர் பெருக்கத்தால் செறிவூட்டப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். கடலோர சுற்றுச்சூழல் அமைப்பில், ...