மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்..என எல்லாவற்றிலும் பற்றாகுறை! பெருந்திரளான ஏழை,எளிய, நடுத்தர பிரிவு மக்களின் ஒரே புகலிடமாகத் திகழும் அரசு மருத்துவமனைகளை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அகில இந்திய அளவில் அரசு மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் மிக வலுவானது! ஆனால், சமீப காலமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் விதமாக அரசு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்திக்க நேருகிறது! சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு ...