ஆளுநரின் அதிகார ஆட்டத்தால் ஆறு பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி அல்லாடுகின்றன.  தற்போது UGC  அறிவித்துள்ள புதிய விதிகள், நமது உயர்கல்வி கட்டமைப்பை பின்னோக்கித் தள்ளுபவை. கூட்டாட்சித் தத்துவத்தை குலைப்பவை. பல்கலைக் கழகங்களை சிதைப்பவை. எளியோருக்கு கல்வியை மறுக்கும் மனுதர்ம நோக்கம் கொண்டவை; புதிய பல்கலைக்கழக மானியக்குழு (UGC)  விதிகளின் படி, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் ...