பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் பஜனை மடங்களாக்கவும், பணம் ஈட்டும் வியாபார நிறுவனங்களாக்கவுமான திட்டத்தின் ஒரு பகுதியே UGC வரைவு அறிக்கையாகும். இது நம் சமூகத்தை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுத்துச் சென்று விடும். இதில் சொல்லப்பட்ட அம்சங்களை ஆய்வு செய்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருகிறது; வரலாறு நெடுகவே கல்வியை முற்றிலும் தங்கள் பிடியில் வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட  மூன்றாம் உலக  நாடுகளின் ஆட்சியாளர்கள் செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில் இப்போது பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டிருக்கும் புதிய வரைவு ...