பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்பட உண்மை காரணம் என்ன? இதில் நமது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் என்ன தான் பிரச்சினை? மத்திய அரசு எவற்றையெல்லாம் நிர்பந்திக்கிறது? இதில் மாநில அரசின் நிலைபாடு என்ன? நிதி மட்டுமா பிரச்சினை? இந்தி மட்டுமா சிக்கல்? இல்லை. இதில் சொல்லப்படாத விவகாரங்கள் நிறையவே உள்ளன; பள்ளிக் கல்வி துறைக்கு இந்த ஆண்டு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதி ரூ 2,152 கோடியை தரமறுக்கிறது. சென்ற ஆண்டு நிதியிலும் 249 கோடியை தராமல் நிறுத்தி விட்டது. இதைக் ...