‘மாவோஸ்டுகள் சுட்டுக் கொலை’ என அடுத்தடுத்து செய்திகள்! வனங்களை வளைத்து போடும் கார்ப்பரேட்களுக்காக தாங்கள் வாழுகின்ற நிலத்தின் உரிமைக்காக போராடும் பழங்குடிகளை குருவியை சுட்டுக் கொல்வதை போல கொன்று விட்டு, ”மவோயிஸ்ட் தீவிரவாதிகளை கொன்றோம்” என எத்தனை ஆண்டுகள் கதை கட்டுவீர்கள்…?   நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (9/02/2025) சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி வனப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து அங்கிருந்த 31 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றனர் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி. சுந்தர்ராஜ்அறிவித்துள்ளார். 12 பெண்கள் ...