அனைவர் உள்ளத்தையும் உலுக்கி எடுத்துவிட்டது இந்த பழங்குடியின் மரணம்! சாதிச் சான்றிதழுக்காக 5 ஆண்டுகள் அலைந்த நிலையில் தன்னைத்தானே தீயிட்டு எரித்துக் கொண்டார் மலைக்குறவரான வேல்முருகன். தமிழகம் முழுக்க பல்லாயிரம் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவது சவாலாகவே தொடர்வது ஏன்? காஞ்சி மாவட்ட படப்பை மலைக்குறவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து, ”எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் அரசு அலுவகத்திற்கு பலமுறை அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே தீக்குளித்து ...