இந்த எளிய மக்கள் எலியை பிடிப்பதில் வல்லவர்கள். ஆனால், காவல் துறையின் வேட்டைக்கு இவர்கள் எலிகளாக பலியாவது தான் சோகம். குற்றவாளிகள் என்ற புலிகளை வேட்டையாடத் துப்பில்லாத காவல் துறையினர் இந்தப் அப்பாவி பழங்குடிகளை குற்றவாளியாக சித்தரித்து, பொய் வழக்கு போட்டுத் தண்டிப்பது தான் இன்றைக்கு பழங்குடியினர் சந்திக்கும் துயரமாக உள்ளது. காவல் துறையின் பார்வையில் தாங்கள் மனிதர்களாகவே கருதப்படாத நிலையில் இந்தியாவில் பிற மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் இன்று வரை இவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆதரிக்க யாருமில்லாத பழங்குடிகளை ஆதரித்து பாதுகாப்புத் தர வேண்டும் ...













