உண்மையிலேயே இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை, இவர்களுக்கு! ஜெய்பீம் சினிமாவை விஞ்சும் நிஜமான சோகக் கதைகள்..! உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவி பழங்குடிகளை நள்ளிரவு புகுந்து தூக்கிச் சென்று பொய் வழக்குகள் புனைந்து, குண்டர் சட்டத்தை பாய்ச்சும் காவல் துறையின் கர்ண கொடூரத் திருவிளையாடல்கள்; நன்றாக உழைத்து கண்ணியமாக வாழ்ந்தாலும், கருமமே கண்ணாக குழந்தைகளை தங்கள் கஷ்டத்திற்கு இடையிலும் படிக்க வைத்து உயரத் துடித்தாலும், காவல் துறையின் கண்களுக்கு இவர்கள் குற்றப் பரம்பரையாகத் தான் தெரிகிறார்கள்! தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் பழங்குடியினர் சற்று கணிசமாக வாழும் ...