இதமாக இதயத்தை வருடிச் செல்லும் கிராமியக் குரல்வளம்! அதிகப் பாடல்களை பாடா விட்டாலும், பத்தே படங்களில் பாடிய தியாகராஜ பாகவதர் இன்னும் நினைவு கூறப்படுவதைப் போல பவதாரிணி பாடல்களும் நினைவு கூறப்பட்டு நெஞ்சில் நிலைக்கும்! அழியாத அமுத கீதங்களை தந்துள்ள பவதாரிணி குறித்த ஒரு பார்வை; இத்தனை ஆண்டுகளாய் தமிழ் இதயங்களை குளிர்வித்து வந்த இசைஞானி இளையராஜா வீட்டு வீணை நரம்பில் ஒன்று அறுந்து போனது .அவர்  மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று 24-ந்தேதி இலங்கை கொழும்பு லங்கா ஆயூர்வேத மருத்துவமனையில் ...