ஒட்டுக் கேட்டு, உளவு பார்த்ததை ஊத்தி மூட திட்டமிடுகிறார்கள் போலும்! எத்தனையெத்தனை தடங்கல்கள்! தயக்கங்கள்! விசாரணை என்ற பெயரில் காலத்தை விரயமாக்கிவிட்டு, அதிகார பலத்தால் உண்மையை அஸ்தமிக்க செய்ய ஒன்றிய பாஜக அரசு ஓரங்க நாடகம் நடத்தி வருகிறதா…? ஜனவரி 2022ல் நியூ யார்க் டைம்ஸ்  NEW YORK TIMES  பத்திரிக்கையில் ஒரு ஆணித்தரமான செய்தி வந்தது. “இந்தியா 2017ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போட்டது, அதில் பெகாசஸ் உளவு சாதனத்தை பல நூறு கோடி டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு இந்திய ...

ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு ஊடகங்கள், அவர்களின் சமூக வலைத்தளங்கள்..ஆகியவற்றில் மகாத்மா காந்தியின் தியாக போராட்ட மரபு ஊனமாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி மீது பொய், அவதூறு, விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். காந்தி கோழையாம்! கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதே சேவையாம்! காலனி ஆட்சி காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக அகிம்சை போராட்ட முறைகளில் இந்திய மக்களை வழி நடத்தியதன் மூலம் மக்களை கோழையாக்கி விட்டார் என்று கூசாமல் சொல்கிறார்கள், இந்துத்துவவாதிகள்! தனி மனிதனது உயர்வுக்கு சொன்னதே மகாத்மா காந்தி அகிம்சை. அது அவரது அரசியல் போராட்ட வழிகள் அல்ல. ...

பாஜக அரசு கிரிப்டோ கரன்ஸியை அங்கீகரித்ததில் இருந்து நாடு முழுவதும் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன! பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக ஏமாறுகின்றனர்! கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்து, அபாரமான வட்டியாம்! காந்தப் படுக்கை, ஈமு கோழி மோசடிகள் வரிசையில் தற்போது கிரிப்டோ கரன்சி! நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில், சேமிப்பு கணக்கில்  வைத்தால் தற்பொழுது ஒரு லட்சம்  ரூபாய்க்கு மாதம் 550 ரூபாய் வட்டியாக வருகிறது. இது மிகக் குறைந்த தொகையாகத் தெரியும். வங்கி நம்மிடம்  இருந்து வாங்கிய பணத்தை 8 சதவிகிதத்திற்கு வீட்டுக் கடன், வாகன ...