சூழல்கள் மாறிக் கொண்டுள்ளன! நாட்கள் நகர,நகர மோடி கும்பலுக்கு நரக வேதனை அதிகரித்து வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழா கை கொடுக்கவில்லை. மத வெறுப்பையும், பய உணர்வையும் தூண்டி, சரிந்துள்ள வாக்கு வங்கியை தூக்கி நிறுத்தத் துடிக்கின்றனர். அப்பப்பா., எத்தனை மாற்றங்கள்..! இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளும், தேர்தல் பரப்புரைகளும், அறை கூவல்களும் சற்றே மாறியுள்ளதை நம்மால் உணரமுடிகிறது. ஏன், எதிர்பார்ப்புகளுக்கும், இலக்குகளுக்கும் கூட மாற்றங்கள் நடந்துள்ளன எனலாம். இதற்கான காரணங்களாக இளந் தலைமுறையினரிடையே தோன்றியுள்ள எதிர்காலத்தைப் பற்றிய ...