வெறும் பிரச்சார வெளிச்சத்திலேயே ஆட்சி நடத்த முடியுமா? கொள்கை, சித்தாந்தம் என்றெல்லாம் பொதுவெளியில் பேசிவிட்டு, நடைமுறையில் சரணாகதி அரசியலை சற்றும் கூச்சமில்லாமல் முன்னெடுக்கும் அபார துணிச்சலுக்கு உண்மையிலேயே உலக அளவில் திமுகவை அடிச்சிக்க முடியாது! நிர்வாக ரீதியில் எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யாமல் தட்டிக் கழித்துவிட்டு, கமுக்கமாக அமைதியும் காத்துக் கொண்டு, எல்லாவற்றுக்கும் கூட்டணிக் கட்சிகளை பேச வைத்து, ஆட்சித் தலைமை தன்னை வெளிப்படுத்தாமலும், தெளிவுபடுத்தாமலும் அமைதி காத்து வருவது தான் திமுக அரசின் நடத்தையாக உள்ளது. நாடு மிக இக்கட்டான சூழலில் ...