கட்சித் தலைவருக்கு உள்கட்சி தேர்தலும் இல்லை, கட்சியின் உயர் நிலைக் குழுவாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. உட் கட்சி ஜனநாயகத்தில் உன்னதமாக திகழ்கிறோம் என்று பீத்திக் கொண்ட பாஜக ஆட்சியிலும், கட்சியிலும் சகல மட்டங்களிலும் இந்த இருவர் வைத்ததே சட்டமாக மாறிய காலச் சூழல், ஆர்.எஸ்.எஸ்சை கரையில் ஒதுங்க வைத்துவிட்டதா? ஜனசங்கத்தில் இருந்து பாரதீய ஜனதாவாக உருவெடுத்தது முதல் , கட்சித் தலைவராக யார் வரவேண்டும் என தீர்மானிப்பது ஆர்எஸ்எஸ் தலைமை தான். பாஜ கவின் சட்டவிதிகளின்படி அக்கட்சியின் தலைவரை தேசீய கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ...











