டெல்லியில் நடந்தது போல இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தேர்தல் சூழ்ச்சிகள் அரங்கேறுமானால், இனி இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்க முடியாது. இந்திய வரலாற்றில் ஆம் ஆத்மியை வீழ்த்த அமல்படுத்தப்பட்ட அதிகார அத்துமீறல்களை மிஞ்ச வேறொன்று கிடையாது; முழு விபரங்கள்; டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து வெளியாகும் விமர்சனங்கள், பழைய ஊழல் எதிர்ப்பு போராளியே மதுபான ஊழல் மற்றும் ‘ஷீஷ் மஹால்’ வசீகரத்திற்கு எவ்வாறு பலியானார் என்பதையே அதிகம் சொல்கின்றன. ஆனால், சிலர் மட்டுமே கட்சியை அவமானப்படுத்தி, அதை ...