இந்தியாவில் அனைத்து கட்சிகளின் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக பாஜக கோலோச்சுகிறது. பாஜக  இன்று இந்தியாவை  ஆட்சி செய்கிறது…என்பதல்ல பெரிய விஷயம். அது மற்ற எல்லா கட்சிகளையும் தலை எடுக்கவிடாமல் ஒரு நரித்தந்திர அதிகார ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக சாதிக்கிறது என்பதே இந்தக் கட்டுரையின் பேசு பொருளாகும்; இந்திய அரசியல் களம் ஒரு வித்தியாசமான – முற்றிலும் புதிய களச் சுழலுக்குள் – தள்ளப்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பு அரசியல் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே – எந்தவித செயல்திட்டமும் இன்றி – கையாளப்படுவதற்கான காரணங்களை அலச ...